சென்னை: அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம் - காஞ்சிபுரம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்தும் கொலு கொண்டாட்டத்தில் சிறந்த படங்களை அக்.2-க்குள் அனுப்புவோருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
நம் வீடுகளில் கொலு கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். இந்த ஆண் டும் வீடுகளில் வைக்கவுள்ள கொலு கண்காட்சியைப் படமாக எடுத்து அனுப்ப வேண்டும். சிறப்பான படங்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
உங்கள் வீடுகளில் வைத்தகொலு படங்களை அனுப்பும்போது உங்கள் பெயர், முகவரியையும் சேர்த்து kk@hindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது https://www.htamil.org/KK என்ற லிங்க்-கில் பதிவு செய்யலாம். 9940699401 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi‘ என்று அனுப்பினால் இந்த நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்களைப் பெறலாம்.
சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களில் இருந்து சிறந்த கொலு படங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கு பரிசுகள் வழங்கப்படும். கொலு படங்களை அக்.2-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கம், திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கம் உடன் இணைந்து வழங்குகின்றன.