தமிழகம்

தருமபுரி, கிருஷ்ணகிரி திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங் களுக்கு திமுக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக உட்கட்சி தேர்தல் முடிவுற்று, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு தமிழகம் முழுக்க நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளராக பழனியப்பன், அவைத் தலைவராக மனோகரன், பொருளாளராக முருகன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு, ஒன்றியம், பேரூர் கழக பொறுப்புகளுக்கும், கிழக்கு மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணி, அவைத் தலைவராக செல்வராஜ், பொருளாளராக தங்கமணி மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு, ஒன்றியம், பேரூர் கழக பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக பர்கூர் சட்டப் பேரவை உறுப்பினர் மதியழகன், மாவட்ட அவைத் தலைவராக நாகராஜ், பொருளாளராக கதிரவன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு, ஒன்றியம், பேரூர் கழக பொறுப்புகளுக்கும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராக ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவராக யுவராஜ், பொருளாளராக சுகுமாறன் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு, ஒன்றியம், பேரூர் கழக பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT