தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கை தூதரை அழைத்து கண்டிக்க வேண்டும் - பிரதமரிடம் அதிமுக எம்பிக்கள் மனு

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைத் தூதரை அழைத்து கண்டிப்பதுடன், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அதிமுக எம்பிக்கள் மனு கொடுத்துள்ளனர்.

நாகை மாவட்ட மீனவர்கள் மீது சமீபத்தில் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்பிக்கள் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 13-ம் தேதி கட லுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் 17-ம் தேதி பாரம்பரிய பகுதியில் மீ்ன்பிடித்துக் கொண் டிருந்த போது, இலங்கை கடற் படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டது. கரைக்கு திரும்பி யதும் அவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழகத்தின் பாக் நீரிணை ஒட்டிய கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் மத்தியில் இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை, வேளாண்துறை மற்றும் இலங்கை அயல்நாட்டு விவகாரம், மீன்வளத்துறை அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த 5-ம் தேதி நடந்தது. இது தொடர்பாக, இரு தரப்பும் இணைந்து வெளியிட்ட செய்தியில், ‘‘இரண்டு நாடுகளின் கடற்படை மற்றும் கடலோரப்படையினர் மீனவர்களை கையாளும்போது எவ்வித வன்முறை மற்றும் உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடாது என்ற இருதரப்பு மீனவர்களின் கோரிக்கையை இரு அரசுகளும் ஏற்றுக் கொண்டன’’ என்று கூறப்பட்டுள்ளது. இரு நாட்டு அமைச்சர்கள் நிலையில் இது தொடர்பாக புரிதல் ஏற்பட் டுள்ள நிலையில், தமிழக மீனவர்கள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் துரதிருஷ்ட வசமானதாகும்.

இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு உடனடியாகவும், உறுதி யாகவும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். உடனடியாக நீங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, இலங்கை தூதரை அழைத்து சம்பவம் தொடர்பாக கடும் கண்டனத்தை தெரிவிக்க மத்திய வெளியுறவுத் துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த சம்பவத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர். எனவே மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவு பிரச்சினை

எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர், தமிழக முதல்வரின் நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம். கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையில் செய்யப்பட்ட ஒப்பந் தம் அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிரானது என அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. எனவே, இந்தியா- இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லையை முடிந்துவிட்ட ஒன்றாக கருதக் கூடாது. எனவே, இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT