தமிழகம்

ரூபாய் நோட்டு விவகாரம்: தமிழக மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பாக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பாக டிசம்பர் 1-ம் தேதி காலை 10.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமை வகிக்க சென்னை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர்கள் சரளாதேவி, கீதா, வனிதா ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் டி. யசோதா, சட்டமன்ற உறுப்பினார் விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT