தமிழகம்

பிஎஃப்ஐ-க்கு தடை: திண்டுக்கல்லில் போலீஸ் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பாப்புலர் ப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து திண்டுக்கல்லில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பிஎஃப்-ஐ அமைப்புக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று திண்டுக்கல் பேகம்பூர் பகுதி யில்போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT