தமிழகம்

பிஎஃப்ஐ தடை எதிரொலி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பிஎஃப்ஐ அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு, பிஎஃப்ஐ (பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா) மற்றும் அதன் துணை அமைப் புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்தது. இதையடுத்து இஸ் லாமிய அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபடலாம் எனக் கருதி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தில் போக்குவரத்துக் கழகப் பணிமனை, சின்னக்கடை, பஜார், கீழக்கரை, பரமக்குடி, தொண்டி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை கூறுகையில், பிஎஃப்ஐ-க்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து அசம்பாவிதங்கள், போராட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர், என்றார்.

SCROLL FOR NEXT