தமிழகம்

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார்: பொன்னையன் தகவல்

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தெரிவித்தார்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வரின் உடல்நிலைப் பற்றி அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னை யன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட், எய்ம்ஸ் மருத்துவர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபிஸ்ட் என அனை வரும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை முதல் வருக்கு அளித்துள்ளனர். இதன் காரணமாகவே முதல்வர் குணம் அடைந்திருக்கிறார். அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும், அதிமுக வெற்றி பெறும்.

முதல்வர் விரைவில் வீடு திரும்பி ஆட்சி, நிர்வாக பொறுப்பை ஏற்கும் காலம் மிக விரைவில் உள்ளது. இதற்கு அவருடைய கையெழுத்தே சாட்சி. முதல்வர் நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பொன்னையன் கூறினார்.

SCROLL FOR NEXT