தமிழகம்

கடந்த ஆண்டு கோவை கருமத்தம்பட்டி அருகே கைது செய்யப்பட்ட 5 மாவோயிஸ்ட்களுக்கு 4,200 பக்க குற்றப்பத்திரிகை நகல்

செய்திப்பிரிவு

வழக்கு விசாரணை டிச.8-க்கு ஒத்திவைப்பு

கோவை கருமத்தம்பட்டி அருகே கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு கோவை நீதிமன்றத்தில் 4,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் நேற்று வழங்கப்பட்டது.

கடந்த 2015-ம் ஆண்டு மே 4-ம் தேதி கோவை அருகே உள்ள கருமத்தம்பட்டியில், மாவோயிஸ்ட் அமைப்பு தலைவர் ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, மாவோயிஸ்ட்கள் கண்ணன், வீரமணி, அனூப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோரை க்யூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் க்யூ பிரிவு போலீஸார் 4,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கு விசார ணைக்காக 5 பேரும் நீதிமன்றத் துக்கு நேற்று அழைத்து வரப்பட் டனர். அப்போது, அவர்கள் அர சுக்கு எதிராகவும், கேரள போலீ ஸாரைக் கண்டித்தும் கோஷங் கள் எழுப்பினர். பின்னர் அவர் கள் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மாவோயிஸ்ட்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இவர்கள் மீது தமிழ்நாடு முழுவதும் 28 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. மேலும், ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் “வழக்கின் தன்மையைப் பொறுத்து, தேவைப் படும் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

பின்னர் நீதிபதியிடம் முறையிட்ட ரூபேஷ், சிறையில் தங்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தரவில்லை என்றார்.

இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்து, உரிய தீர்வு காணுமாறு நீதிபதி தெரிவித்தார்.

இதேபோல, மாவோயிஸ்ட் வீரமணி, தன்னை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது போலீஸார் கீழே தள்ளியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவோயிஸ்ட் களுக்கு 4,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. வழக்கின் விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

இதேபோல, 2014-ல் பொள் ளாச்சி அருகே உள்ள அங்கலக் குறிஞ்சியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரைக் கடத்தி, மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்த்துவிட்டதாக, கணபதி, சிகாமணி, கண்ணன், செல்வராஜ், கணேஷ்குமார், பார்த்திபன், நாகராஜ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் கணேஷ்குமார் இறந்துவிட்டார். மற்றவர்களுக்கு நீதிமன்றத்தில் நேற்று 200 பக்க குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT