ஐஏஎஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல்முறையாக சென்னையில் 5 இடங்களில் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஏஎஸ், ஐஎப்எஸ். ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளில் 1,079 காலியிடங் களை நேரடியாக நிரப்புவதற்காக சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு டிசம்பர் 3 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னையில் மட்டும் மெயின் தேர்வு நடத்தப்படும். வழக்கமாக சென்னையில் ஒரே இடத்திலேயே அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப் படும். ஆனால், இந்த ஆண்டு முதல்முறையாக 5 இடங் களில் மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை சூளை ராட்லர் தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காயிதே மில்லத் அரசு பெண்கள் கலைக் கல்லூரி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை ஆசான் மெமோரியல் மேல்நிலைப் பள்ளி, கோடம் பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த இடங்களில் மொத்தம் 965 பேர் தேர்வெழுதுகிறார்கள். சூளை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத் யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐஏஎஸ் மெயின் தேர்வை தமிழகத்தில் 884 பேர் எழுதினர். இந்த ஆண்டு மெயின் தேர்வெழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்ப தால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.