தமிழகத்தில் கடந்த ஆண்டு அதிக மான வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டதில் சென்னை மாவட்டம் முத லிடத்திலும், குறைவான வழக்குகளை விசாரித்து தீர்வு கண்டு பெரம்பலூர் கடைசி இடத்திலும் உள்ளன.
தமிழகத்தில் 2015-ம் ஆண்டில் தீர்வு காணப்பட்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 349. இதில் உரிமையியல் வழக்குகள் 2 லட்சத்து 98 ஆயிரத்து 922. குற்றவியல் வழக்குகள் 8 லட்சத்து 52 ஆயிரத்து 427. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டு சென்னை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 4,052 வழக்குகளுக்கு தீர்வு கண்டு பெரம்ப லூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. பெரம்பலூருடன் அரியலூர் (9,773), திருவண்ணாமலை (12,748), திருவாரூர் (13,320), நீலகிரி (14,096) ஆகிய மாவட்டங்கள் கடைசி 5 இடத்தில் உள்ளன.
வழக்குகளின் நிலுவையை குறைக்க வேண்டும் என்பதே உச்ச நீதிமன்ற, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் விருப்பமாக உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 998 விசாரணை நீதிமன்றங்களில் கடந்த ஆண்டு இறுதி வரை 6 லட்சத்து 64 ஆயிரத்து 387 உரிமையியல் வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இதில் சுமார் 2 ஆயிரம் வழக்குகள் 20 ஆண்டு களுக்கும் மேலாக தீர்வு காணப்படா மல் இழுத்துக் கொண்டிருக்கின்றன. குற்றவியல் வழக்குகளைப் பொறுத்த மட்டில் கடந்த ஆண்டு இறுதிவரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 352 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 878 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாதவை.
சென்னையில் மட்டுமே 75,578 வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளோடு தொடர்புடைய இதர வழக்குகளின் நிலுவையையும் சேர்த் தால் தமிழகத்தில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டும். ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 2 லட்சம் அசல் வழக்குகள் தாக்கலாகிறது.
நாடு முழுவதும் உள்ள வழக்கு களின் தேக்கத்தைக் குறைக்கும் வித மாக ஒவ்வொரு திங்கள்கிழமையிலும் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளுக்கும், புதன்கிழமைகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள உரிமை யியல் வழக்குகளுக்கும் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்களின் செயல் திறன் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ், ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘உயர் நீதிமன்றத்தில் வழக்குகளின் தேக்கத்தைக் குறைக்க இறுதி விசாரணை வழக்குகளுக்கென தனியாக நீதிபதிகளை நியமிக்க வேண்டும். எல்லா நீதிபதிகளுக்கும் தினமும் 4 முதல் 5 இறுதி விசாரணை வழக்குகளை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். தினமும் ஒரு நீதிபதி ஒரு இறுதி விசாரணை வழக்கை முடித் தால்கூட தினமும் 50 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.
அதுபோல நீதிபதிகளின் வேகத் துக்கு ஈடுகொடுக்கும் விதமாக தகுதி வாய்ந்த, நன்கு ஆங்கில புலமை பெற்ற திறமையான ஊழியர்களை காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களிலும் உடனடியாக நியமிக்க வேண்டும். வழக்குகள் தேக்கமடைவதற்கு வேக மில்லாத பணியாளர்களும் ஒரு காரணம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக வழக்கறிஞர்களும் நீதிபதி களுக்கும், நீதித்துறைக்கும் ஒத் துழைக்க வேண்டும். மாவட்ட நீதிபதி களுக்கு போதுமான பணியிடைப் பயிற்சிகளை வழங்க வேண்டும்’’ என்றார்.
முதல் 10 இடம்
சென்னை உயர் நீதிமன்றம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கடந்த ஆண் டில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 154 அசல் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆனாலும், தற்போது 2 லட்சத்து 84 ஆயிரத்து 428 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கடந்த ஆண்டில் மொத்தம் 8,104 வழக்கு களை விசாரித்து தீர்வு கண்டுள்ளார். அதிக வழக்குகளை விசாரித்த நீதிபதி கள் பட்டியலில் டி.எஸ்.சிவஞானம் (18,829), எம்.எம்.சுந்தரேஷ் (16,731), ஆர்.சுப்பையா (14,081), எஸ்.வைத்திய நாதன் (13,563). பி.என்.பிரகாஷ் (12,818), கே.கல்யாணசுந்தரம் (11,508), ஆர்.மகாதேவன் ( 11,064), கே.கே.சசிதரன் (10,525), டி.ஹரிபரந்தாமன் (10,252), வி.எம்.வேலுமணி (10,128) ஆகியோர் முதல் 10 இடத்தில் உள்ள னர். இவர்களில் நீதிபதி ஹரிபரந் தாமன், கடந்த ஆண்டு ஓய்வுபெற்றார். மற்ற நீதிபதிகள், இந்த ஆண்டும் ‘டாப் 10’ பட்டியலில் இடம்பெற வழக்கு களை வேகமாக விசாரித்து வருகின் றனர். கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத் தில் இருந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 35. தற்போது இந்த எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.