தமிழகம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வரவேண்டும்: பிரதமருக்கு வைகோ கடிதம்

செய்திப்பிரிவு

சென்னை: ஜெனிவாவில் நடைபெற்றுவரும்ஐநா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய 51-வது அமர்வில் இலங்கை தமிழர் பிரச்சினைபரிசீலனையில் உள்ளது. அதற்கு ஆதரவாக இந்தியா தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் எனபிரதமரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வகையில், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், நடைபெற்ற தமிழ் இனப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் மன்றத்தில் விசாரணை நடத்தவும், இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழ் ஈழம் குறித்துப் பொது வாக்கெடுப்பு நடத்தவும், ஈழத் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்துள்ள பகுதிகளைத் திரும்பஈழத்தமிழர்களுக்கே கொடுக்கவும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானங்கள் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரதமருக்கு வைகோ கடிதம் அனுப்பிஉள்ளார். மேலும், ஐநாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

SCROLL FOR NEXT