தமிழகம்

நாச்சியார்கோவிலில் கபடிப் போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் மரணம்

செய்திப்பிரிவு

கும்பகோணம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(35).

இவர், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவில் பாரதியார் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலன்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT