தமிழகம்

சென்னையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத் தின் தமிழ்நாடு பிரிவு சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சம்மேளனத் தின் மாநில தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ் ணன், அகில இந்திய செயலாளர் கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். அவர்கள் கூறியதாவது:

உயர் மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்து 16 நாட் கள் ஆகியும் மக்களின் துயரம் இன்றும் நீடிக்கிறது. பழைய நோட்டுகளை மாற்றவும் முடியா மல், வங்கியில் செலுத்தவும் முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இனி பழைய நோட்டுக்களை வங்கியில்கூட மாற்ற முடியாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு வங்கிக் கணக்கு இல்லாத சாதாரண மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான தாக்குதலாகும். மக்க ளின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நடவடிக் கைகள் முடங்கிப் போயுள்ளன. எனவே மக்களின் அவதியை குறைப்பதற்காக மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் போர்க்கால அடிப் படையில் அனைத்து ஏடிஎம்களையும் புதிய ரூபாய் நோட்டுகளுக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க வேண்டும். தேவையான அளவு 100, 500 ரூபாய் நோட்டுகளை விநியோகிக்க வேண்டும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை பழைய ரூபாய் நோட்டுகளை பெறவும், புதிய ரூபாய் நோட்டுகளை வழங்கவும் அனுமதிக்க வேண்டும். ரூபாய் நோட்டு பிரச்சினையால் உயிரிழந்த பொதுமக்கள், வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT