சென்னை: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், " இந்திய நாட்டின் முன்னாள் பிரதமரும், மிகச்சிறந்த அறிஞருமான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சி நிர்வாகத்தில் நிலைத்தன்மையை அளித்தார், பொது வாழ்வில் கண்ணியத்தைப் பேணினார், வறுமையைப் பெருமளவில் குறைத்தார், இவை அனைத்தையும் பணிவின் சிகரமாக இருந்து அவர் சாதித்தார். அவர் நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் பெற்றுத் திகழ விழைகிறேன்" இவ்வாறு அந்தப் பதிவில் கூறியுள்ளார்.