சபரிமலை சீசனை முன்னிட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படு கின்றன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
சென்ட்ரல் - கொல்லம்
கொல்லத்தில் இருந்து டிசம்பர் 12, 16, 19, 23, 26, ஜனவரி 2, 4, 9, 16, 18 ஆகிய தேதிகளில் அதி காலை 5.45 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (82856) மறு நாள் காலை 11 மணிக்கு விசாகப் பட்டினம் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 19, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06041) மறுநாள் காலை 6.45 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
இதேபோல, கொல்லத்தில் இருந்து டிசம்பர் 20, 22, 27, 29, ஜனவரி 3, 5, 10, 12, 17, 19 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06042) மறுநாள் மதியம் 12 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 17, 31, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் இரவு 10.40 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06045) மறுநாள் மதியம் 2.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 21, 28, ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06047) மறுநாள் மதியம் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
கொல்லத்தில் இருந்து டிசம்பர் 22, 29, ஜனவரி 5, 12, 19 ஆகிய தேதிகளில் இரவு 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06048) மறுநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06049) மறுநாள் மதியம் 2.10 மணிக்கு கொல்லம் சென்றடையும். கொல்லத்தில் இருந்து டிசம்பர் 21, 28, ஜனவரி 4, 11, 18 ஆகிய தேதிகளில் இரவு 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06050) மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06051) மறுநாள் காலை 11.45 மணிக்கு கொல்லம் சென்றடையும். இதேபோல, கொல்லத்தில் இருந்து டிசம்பர் 20, 27, ஜனவரி 3, 10, 17 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06052) மறுநாள் மதியம் 1.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
திருச்சி - எழும்பூர்
திருச்சியில் இருந்து டிசம்பர் 17, 24, 31, ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06026) அதேநாளில் இரவு 9.10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06025) அதே நாள் இரவு 8.10 மணிக்கு திருச்சியைச் சென்றடையும்.
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக் கான முன்பதிவு இன்று (29-ம் தேதி) தொடங்குகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.