தமிழகம்

கோவை, திருப்பூரில் பாதுகாப்பு பணிக்காக 3,000 போலீசார் குவிப்பு

செய்திப்பிரிவு

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

என்.ஐ.ஏ சோதனைக்கு பின்னர், செப்டம்பர் 22-ம் தேதி இரவு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 9 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக ஈரோட்டில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ஐந்து சம்பவங்களும், மேட்டுப்பாளையத்தில் இரண்டு சம்பவங்களும், புளியம்பட்டியில் ஒரு சம்பவமும் நடைபெற்றுள்ளது.

அனைத்து வழக்குகளிலும் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக தற்போது எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை.

கோவை மாவட்டத்தில் 2,000 போலீசார், திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தலா1,000 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் பாட்டிலில் பெட்ரோல் மற்றும் எரிபொருட்கள் வழங்க கூடாது என பெட்ரோல்பங்க்-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT