தமிழகம்

திருச்செங்கோடு அருகே பன்றிக் காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அருகே பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்.

திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் வெங்கடேசபுரியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி சரோஜா (53). இவர் நுரையீரல் தொற்று பாதிப்பு காரணாக கடந்த 19-ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, மல்லசமுத்திரம் பேரூராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெங்கடேசபுரி, ஏரிக்காடு பகுதியில் மருந்து தெளித்தல் உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT