பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அலுவலகங்களில் என்ஐஏ சோதனையைக் கண்டித்து, மதுரையில் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் கோரிப்பாளையம் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், உலமாக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் ராஜா ஹசன் தலைமை வகித்தார். செயலர் பிஸ்மில்லாகான், பொருளாளர் நிஷ்தார் அஹமது, அப்துல்காதர், உள்ளிட்ட ஜமா அத் நிர்வாகிகள், கட்சிகளின் பிரமுகர்கள், நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கைது செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.