தமிழகம்

சென்னை மாநகராட்சியில் 5 நாட்களில் ரூ.37 கோடி வரி வசூல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல் லாது என அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணத்தை பழைய நோட்டுகளாக வாங்கலாம் என அறிவுறுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி சார்பில் வரியை பழைய நோட்டுகளாக செலுத்தும் வகையில், கடந்த 13-ம் தேதி முதல் 446 இடங்களில் வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் கடந்த 5 நாட்களில் மொத்தம் ரூ.37 கோடியே 61 லட்சம் வசூலாகியுள்ளது.

SCROLL FOR NEXT