திருப்பத்தூர் அருகே மின்வாரிய ஊழியர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். லேசான காயங்களுடன் அவரது மகன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: வேலூர் மாவட் டம் திருப்பத்தூர் அடுத்த காக்கங் கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்(55). இவர், கந்திலி அருகே யுள்ள கரியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில், மின்பாதை ஆய் வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ராஜேஸ் வரி(42). மகன் தமிழரசன்(25), மகள் சுகன்யா(23). பொறியியல் படித்த தமிழரசன் ஒசூரிலும், சுகன்யா பெங்களூருவிலும் பணிபுரிந்து வந்தனர்.
வாரந்தோறும் சனிக்கிழமை இரவு சொந்த ஊருக்கு வரும் தமிழரசனும் சுகன்யாவும் ஞாயிற் றுக்கிழமை பெற்றோருடன் தங்கி விட்டு, திங்கள்கிழமை அவரவர் பணிக்கு செல்வது வழக்கம். அதன் படி, கடந்த சனிக்கிழமை மாலை 2 பேரும் வீட்டுக்கு வந்தனர்.
இரவு பணி முடிந்து நேற்று அதிகாலை மோகன் வீட்டுக்கு வந்தார். பின்னர், அவர் அவரது அறைக்கு உறங்கச் சென்றார். இந்நிலையில், நேற்று காலை 7.30 மணி வரை மோகன் வீட்டின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத் தினர் ஜன்னல் வழியாக பார்த்த னர். அப்போது, மோகன், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் சுகன்யா ஆகியோர் ரத்த வெள்ளத் தில் இறந்து கிடந்தனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், காவல் ஆய்வா ளர்கள் செந்தில் (தாலுகா), ரத்தின சபாபதி (ஜோலார்பேட்டை) மற் றும் போலீஸார் சம்பவ இடத் துக்கு சென்றனர். மோகன் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந் ததால், போலீஸார் கதவை உடைத் துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அங்கு தமிழரசன் கைகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இருந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். உயிரிழந்த 3 பேரின் உடல் களை திருப்பத்தூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.
இது குறித்து கந்திலி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து தமிழர சனிடம் விசாரித்தபோது, ‘முகமூடி அணிந்தவர்கள் அதிகாலை 5 மணிக்கு வீடு புகுந்து தந்தை, தாய் மற்றும் தங்கை ஆகியோரை கொலை செய்தனர். இந்த சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தபோது, தன்னையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக’ கூறினார்.
வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டி ருந்ததால், வெளியாட்கள் உள்ளே வர வாய்ப்பில்லை. எனவே, கொலைக்கும் தமிழரசனுக் கும் தொடர்பு இருக்குமோ என போலீஸார் விசாரிக்கின்றனர். வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.