தமிழகம்

மின்கட்டணம் செலுத்த கெடு நீட்டிக்கப்படாது: மின்வாரியம் தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசின் அறிவிப்பின்படி, டிசம்பர் 15-ம் தேதி வரை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் தாழ்வழுத்த தனிப்பட்ட மற்றும் வீட்டு உபயோக மின் நுகர்வோர்களிடமிருந்து நடப்புக் கால மின்பட்டியல் மற்றும் அதற்குரிய நிலுவைத் தொகைக்கு பழைய 500 ரூபாய் நோட்டு ஏற்றுக் கொள்ளப்படும்.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் தமது மின் கட்டணத்தை செலுத்தும் கடைசி நாள் 09.11.2016 முதல் 30.11.2016 ஆக இருப்பின் அவர்களுக்கு மேலும் ஒரு வாரத்துக்கு தாமதக் கட்டணமின்றி மின் கட்டணம் செலுத்த ஏற்கெனவே காலக்கெடு வழங்கப் பட்டது. தாமதக் கட்டணமின்றி மின்கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது.

மின் கட்டணத்தை உரிய நாட்களுக்குள் செலுத்தி, மின்துண் டிப்பு போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SCROLL FOR NEXT