தமிழகம்

முதல்வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை: மதுரை ஆதீனம், சங்கர் கணேஷ் நலம் விசாரிப்பு

செய்திப்பிரிவு

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலைப் பற்றி மதுரை ஆதீனம், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை யின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனையின் மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந் துள்ள பெண் பிசியோதெரபி நிபுண ரும் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார். முதல் வருக்கு தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று அப் போலோ மருத்துவமனைக்கு வந்த மதுரை ஆதினம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தின் முன்னாள் தலைவர் கேயார், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகை ஆர்த்தி ஆகியோர் முதல்வரின் உடல் நிலைப் பற்றி விசாரித்தனர். முதல் வரின் உடல்நிலைப் பற்றி மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல்வர் நலமாக இருக்கிறார். அவர் விரைவில் வீடு திரும்புவார்” என்றார்.

SCROLL FOR NEXT