ரயிலுக்கும், நடைபாதைக்கும் இடையே சிக்கிய இளைஞரை மீட்கும் ரயில்வே காவலர்கள். 
தமிழகம்

கோவை | ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றிய ரயில்வே காவலர்கள்

செய்திப்பிரிவு

கோவை: கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து யஸ்வந்த்பூர் செல்லும் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், கோவை ரயில்நிலையத்தின் 3-வது நடைமேடைக்கு வந்து, சிறிதுநேரத்தில் புறப்பட்டது. ரயில் மெதுவாக சென்றபோது, இறங்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அவரது உடலின் மேல் பகுதி நடைபாதையிலும், கீழ் பகுதி தண்டாளத்தை நோக்கியும் இருந்தது. அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே காவலர்கள், துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை நடைபாதைக்கு இழுத்து மீட்டனர். அந்த நபர் சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சிவகுமார் என்பதும், வேலை விஷயமாக கேரளாவுக்கு சென்றுவிட்டு, சேலம் திரும்புவதற்காக கோவை ரயில் நிலையத்துக்கு வந்தது தெரியவந்தது. இதில் காயமடைந்த சிவகுமார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT