சென்னை: பொன்னேரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் 13 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு ரூ.7.86 லட்சம் இழப்பீடு வசூலிக்கப்பட்டது. தமிழ்நாடு மின்வாரியத்தின் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் 13 இடங்களில் மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.7.86 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.42 ஆயிரம் செலுத்தியதால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின்திருட்டு தொடர்பாக பொதுமக்கள் 94458 57591 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.