தமிழகம்

‘மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு’ - நட்டா பேச்சு தொடர்பான ட்வீட்டை நீக்கிய தமிழக பாஜக

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைகனா பூர்வாங்கப் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது என்று பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசியது தொடர்பான ட்வீட்டை தமிழக பாஜக நீக்கியுள்ளது.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பூர்வாங்கப் பணிகள் 95% முடிந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து தமிழக பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 95% முடிந்துள்ளன. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களும் நூறிலிருந்து, இருநூற்று ஐம்பதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் முடிந்ததும், அதை பிரதமர் திறந்து வைப்பார்" என்று கூறப்பட்டிருந்தது.

நட்டாவின் பேச்சும், தமிழக பாஜகவின் பதிவும் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும், “95 சதவீதம் முடிந்த எய்ம்ஸ் எங்கே?” என்று விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் ஆகியோர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% நிறைவு பெற்றுள்ளது என்று நட்டா பேசியதாக வெளியிட்ட ட்வீட்டை தமிழக பாஜக நீக்கியுள்ளது.

SCROLL FOR NEXT