தமிழகம்

உயர் கல்வியில் சேராத 8588 மாணவர்கள்: விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயர் கல்வியில் சேராத 8588 மாணவர்களின் விவரங்களை அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த 79,792 மாணவர்கள் உயர்கல்வி சேர்ந்துள்ளார்களாக என்று பள்ளிக் கல்வித் துறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 8588 மாணவர்கள் எந்தவித உயர் கல்வியிலும் சேரவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர்களை தனித்தனியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT