தமிழகம்

கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

செய்திப்பிரிவு

திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக, பாஜக மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை பீளமேடு காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர், பீளமேடு காவல் நிலையம் முன்பு நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலர் ஆ.ராசா எம்.பி.யின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். அங்கு தூண்களில் ஒட்டப்பட்டிருந்த திமுகவினரின் சுவரொட்டிகளை கிழித்து எறிந்தனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 400 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து, சுவரொட்டிகளை கிழித்த 11 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மீதமுள்ள அனைவரையும் பிணையில் விடுவித்தனர். மேலும், உத்தம ராமசாமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT