அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் தொகுதிகளில் 91 வேட்பாளர் களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 48 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அக்டோபர் 26-ல் தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் நவம்பர் 2-ம் தேதி மாலை 3 மணிக்கு முடிந்தது. அரவக் குறிச்சியில் 59, தஞ்சையில் 36, திருப் பரங்குனறத்தில் 44 என மொத்தம் 139 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. அந்தந்த தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் அரவக்குறிச்சியில் 13, தஞ்சையில் 21 திருப்பரங்குன்றத்தில் 14 என மொத்தம் 48 பேரின் மனுக்கள் பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப் பட்டன. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அரவக் குறிச்சியில் 46, தஞ்சையில் 15, திருப்பரங்குன்றத்தில் 30 என மொத்தம் 91 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி நாளாகும். நாளை மாலை 5 மணிக்குப் பிறகு 3 தொகுதிகளிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யாகும். இதைத்தொடர்ந்து, நவம்பர் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்.
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங் குன்றம் தொகுதிகளில் தேர்தல் நடப்பதையொட்டி கரூர், தஞ்சை, மதுரை மாவட்டங்களில் நவம்பர் 19-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக பொதுத்துறை வெளியிட் டுள்ள அரசாணையில், செலாவணி முறிச்சட்டத்தின்படி அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும் நவம்பர் 19-ம் தேதி 3 தொகுதிகள் அடங்கிய கரூர், தஞ்சை, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.