தமிழகம்

தமிழகம் உருவான நவம்பர் 1-ம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு தமிழகம் உருவான நவம்பர் 1-ம் தேதியை, அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட தமிழர் தேசிய முன்னணி சார்பில் தமிழ்நாடு மாநிலத்தின் 60-வது பிறந்தநாள் விழா, தமிழகத் திருநாளாக மன்னார்குடியில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழன்னை ஊர்வலம் தேரடியில் இருந்து பந்தலடி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் கலந்துகொண்டு, தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து, மலர்த் தூவி மரியாதை செய்து, ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பழ.நெடுமாறன் கூறியதாவது:

மொழிவழி மாநிலங்கள் பிரிக் கப்பட்டு தமிழ்நாடு என்ற மாநில மாக தமிழகம் உருவாகி 60 ஆண்டு களாகிவிட்டன. கர்நாடகா, கேரளாவில் அனைவரும் ஒருங்கிணைந்து அந்தந்த மாநிலம் உருவான நாளை அரசு விழாவாக கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் தமிழ்நாட்டின் பிறந்த நாளான நவம்பர் 1-ம் தேதியை அரசு சார்பில் விழாவாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலை வரவேண்டும் அதற்கு இந்த நாளில் உறுதியேற்போம் என்றார்.

மன்னார்குடியில் நடைபெற்ற, தமிழ்நாடு மாநிலத்தின் 60-வது பிறந்தநாள் விழாவில் தமிழன்னை சிலைக்கு பழ.நெடுமாறன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SCROLL FOR NEXT