தமிழகம்

ரேஷன் கடைகளில் விநியோகிக்க 3 மாதத்துக்கு தேவையான அரிசி இருப்பில் உள்ளது: அமைச்சர் காமராஜ் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிக்க 3 மாதத்துக்கு தேவையான அரிசி இருப்பில் உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித் துள்ளார். சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் கடை களுக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 2.02 கோடி குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெற்று வருகின்ற னர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சிறப்பு பொது விநி யோகத் திட்ட பொருட்கள் கிடைக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொது விநி யோகத்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதில், புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கோரி உரிய ஆதாரங் களுடன் விண்ணப்பிக்கும் மனு தாரர்களுக்கு 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 66 ஆயி ரத்து 463 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் வழங் கத் தயாராக உள்ள 23 ஆயிரத்து 860 குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொள்ளும்படி மனுதாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 19 ஆயிரத்து 912 போலி அட்டை கள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள் ளன. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை 5 லட்சத்து 56 ஆயிரத்து 948 மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சத்து 35 ஆயிரத்து 972 மனுக்கள் மீது அன்றே தீர்வு காணப்பட்டுள்ளது.

தற்போது 75 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு பருவத்தில் இதுவரை 11 ஆயிரத்து 946 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஊக்கத்தொகையாக ரூ.70, சாதா ரகத்துக்கு ரூ.50ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சன்னரகம் குவிண்டால் ரூ.1,580-க்கும், சாதா ரக நெல் ரூ.1,520-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 930 பேர் தடுப்புகாவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இலவச அரிசி திட்டத்துக்கு 3 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது. சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் முதலியன கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT