பல்வேறு தரப்பினரும் ரூ.500 மற்றும் ஆயிரத்தை வாங்க மறுத்துவரும் நிலையில், விருத்தாசலத்தில் தண்டல் வட்டிக்கு பணம் பரிமாற்றம் செய்வோர் எவ்வித தடையுமின்றி ரூ.500 மற்றும் ஆயிரத்தை வாங்கி வருகின்றனர்.
இது தொடர்பாக தண்டல் வட்டிக்காரரிடம் கேட்டபோது, ''வாரச்சந்தை, டீக்கடை, பூக்கடை, சாலையோரக் கடை நடத்துவோர் போன்ற அன்றாட வியபாரத்தில் ஈடுபடுவோர் தான் எங்களது வாடிக்கையாளர்கள். அவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தான் வாங்குகிறோம். ஒருபுறம் வசூல் மற்றும் வட்டிக்கு பணம் வாங்குவோர் என சம அளவில் இருப்பதால் தடை செய்யப்பட்ட பணத்தை வாங்கிவருகிறோம்.
டிசம்பர் 15-ம் தேதிக்கு பின்னர் வாங்க மாட்டோம். அதற்குள் அரசு மாற்று ஏற்பாடு செய்யும் என்ற நம்பிக்கையில் எங்களது வட்டித் தொழிலை செய்துவருகிறோம்'' என்றார்.