ராகுல் காந்தி | கோப்புப் படம் 
தமிழகம்

கூடலூரில் வரும் 29-ம் தேதி ராகுல் காந்தி நடைபயணம்

செய்திப்பிரிவு

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.

கேரளாவை தொடர்ந்து, வரும் 29-ம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபயணம் மேற்கொண்டு மறுநாள் கர்நாடகா செல்கிறார்.

கூடலூரில், அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வழிகள், இரவு தங்கும் இடத்தை, காங்கிரஸ் எம்.பி. ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆய்வு செய்தனர்.

எம்பி ஜெயக்குமார் கூறும்போது, ‘‘வரும் 29-ம் தேதி கூடலூர் வரும் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோழிப்பாலம் முதல் கூடலூர் வரை நடைபயணம் மேற்கொள்ளும் அவர், கூடலூரில் நடைபெற உள்ள கூட்டத்தில் பேசுகிறார்’’ என்றார்.

SCROLL FOR NEXT