மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கலாமா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டு வந்த 11 மாடி கட்டிடம், கடந்த 28-ம் தேதி இடிந்து தரைமட்ட மானது. இதில் 61 பேர் பலி யாயினர். 27 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். இந்தக் கட்டிடத் தின் அருகில் உள்ள மற்றொரு 11 மடி கட்டிடமும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், அது பலவீனமக இருப்பதாகக் கூறி கடந்த 1-ம் தேதி சீல் வைத்தனர். கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தால் அதன் அருகில் வசித்தவர்கள், வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர்.
இடிந்து தரைமட்டமான கட்டிடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். கட்டிடம் பலவீனமாக உள்ளதை அவர்கள் உறுதி செய்தனர். அடுத்தகட்டமாக என்ன செய்ய லாம் என அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வரு கின்றனர். அசம்பாவிதம் நடப்ப தற்கு முன்பு கட்டிடத்தை வெடி வைத்து தகர்க்கலாமா என்றும் ஆலோசிக்கப்படுகிறது. அந்தக் கட்டிடத்தின் அருகே குடியிருப்பவர்கள் வேறு இடத் துக்கு செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது