சென்னை: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் (ஃபியோ) தென்மண்டல தலைவராக, ஏவிடி குழுமநிறுவனங்களின் தலைவர் ஹபீப்ஹுசைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்தஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அவர் தேர்வு செய்யப்பட்டார். ஹபீப் ஹுசைன் தற்போது அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய தோல் ஆராய்ச்சி மையம் மற்றும்இந்திய தோல் தொழில் கூட்டமைப்பின் தலைவராக பதவி வகித்து வருகிறார். தொழில்துறையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ள இவர்,மதிப்புக் கூட்டல் பொருட்களை தயாரிப்பதற்கு மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
பெங்களூரூ பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவில் பட்டம் பெற்ற ஹபீப், கடந்த 1974-ம்ஆண்டு ஏவிடி குழுமத்தில் பணியில் சேர்ந்தார். ஃபியோவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள இவர், தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையின் சவால்களை சமாளிப்பதற்கு ஏற்றுமதியாளர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவார். இது, மத்திய அரசு எதிர்பார்க்கும் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை அடைய உதவும் என இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.