மதுரையில் தரை துடைக்க பயன்படும் மாப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத் தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேமதடைந்தன.
மதுரை எம்.கரிசல்குளம் அருகில் உள்ள சோமநாத புரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர் மதுரை-திருமங்கலம் நான்குவழிச் சாலையில், அவனியாபுரம் அருகே சேர்மத்தாய் வாசன் கல்லூரிக்குச் செல்லும் சந்திப்பில் என்பிகே எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு வீடு, வர்த்தக நிறுவனம், மருத்துவமனைகளுக்கான தரைதுடைக்கும் மாப்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று முன்தினம் பணி முடிந்து நிறுவனத்தை அடைத்துச் சென்றனர்.
நேற்று ஞாயிறு விடுமுறை என்பதால் குறைந்த நபர்களைக் கொண்டு வேலை பார்ப்பதற்காக நிறு வனத்தைத் திறக்க வந்தனர். அப்போது உள்ளே தீப்பற்றி எரிவது தெரிய வந்தது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித் தனர். அனுப்பா னடி, தல்லாகுளம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால் மாப் தயாரிக்கப் பயன்படுத்தும் நூல், பஞ்சு உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக உரிமையாளர் ரவி தெரிவித்தார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் விசாரிக்கிறார்.