தமிழகம்

சுற்றுலாத் தலமாக வேண்டிய வேளச்சேரி ஏரி: சாக்கடை நீர்த்தேக்கமாக மாறும் அவலம்- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

எம்.மணிகண்டன்

சுற்றுலாத் தலமாக வேண்டிய வேளச்சேரி ஏரி ஆகாயத் தாமரை படர்ந்து கிடப்பதாலும், குப்பைகள் குவிவதாலும் சாக்கடைத் தேக்கமாக மாறி வருவதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. ஒரு காலத்தில் வேளச்சேரி செக் போஸ்ட் முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை பரந்து விரிந்து இருந்த அந்த ஏரி, தற்போது 45 ஏக்கர் அளவே உள்ளது. ஆக்கிர மிப்புகளால் அந்த ஏரியின் பரப் பளவு நாளுக்கு நாள் சுருங்கி வரு கிறது. ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்பு கள் பெருகிவிட்டதால், நீர்வழிப் பாதைகளில் அடைப்பு ஏற்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மழையின் போது வேளச்சேரி வெள்ளத்தில் மிதந்தது.

இந்நிலையில், இந்தாண்டு மழைக்காலம் தொடங்கியுள்ள சூழலில், வேளச்சேரி ஏரியை புன ரமைக்கவோ, நீர்வழிப்பாதை களை சரி செய்யவோ எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வேளச்சேரி யைச் சேர்ந்த ஜவஹர் மனோஜ் என்பவர் கூறியதாவது:

எங்கள் பகுதியில் வாக்கு சேக ரிக்க வருபவர்கள் அனைவரும் வேளச்சேரி ஏரியை சுற்றுலாத் தலமாக்குவோம் என்றுதான் கூறுகின்றனர். ஆனால், வெற்றி பெற்ற பின்னர் அதனைக் கண்டு கொள்வதில்லை. வேளச்சேரி ஏரியின் ஒருபுறம் மருதுபாண்டி சாலை, மறுபுறத்தில் ஏரிக்கரை சாலை உள்ளது.

இதில் மருதுபாண்டி சாலை ஓரம், ஏரியின் கரையை ஒட்டி, பொது மக்கள் நடைபயிற்சி மேற்கொள் ளும் விதமாக இரும்பு தடுப்புகள் மற்றும் கான்கிரீட் சிமென்ட் கற் களால் ஆன தரை அமைக்கப் பட்டது. ஆனால், அந்த இடத்தில் குடிகாரர்கள்தான் அதிக நேரம் உள்ளனர். தடுப்புக்காக அமைக்கப் பட்ட இரும்பு தடுப்புகளை திருடிச் செல்வது, ஏரிக்குள் பிடுங்கி வீசுவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

மறுபுறமான ஏரிக்கரை சாலை யில் ஏரியின் ஓரம் முழுவதும் 3 கி.மீ நீளத்துக்கு குடிசைகள் உள்ளன. அங்குள்ள பொது மக்கள் ஏரியில்தான் குப்பை கொட்டுகின்றனர். இதனால் மறுகரையில் நின்று அடுத்த கரையை பார்த்தால் அந்த ஓரம் முழுவதும் குப்பையாகவே காட்சி அளிக்கிறது. 100 அடி சாலையை ஒட்டிய இடங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. நகரின் மத்தியில் சுற்றுலாத் தலமாக இருக்க வேண்டிய ஓர் இடம் சாக்கடைத் தேக்கமாக மாறி வருகிறது. எனவே, வேளச்சேரி ஏரியை சீரமைத்து அழகாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக வேளச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகரிடம் கேட்டபோது, ‘‘வேளச்சேரி ஏரியை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். ஏற்கெனவே, குப்பை குவிந்த போது, மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துப் பேசி அவற்றை அப்புறப்படுத்த சொன்னேன். அதன்படி அவர்களும் செய்தனர். இப்போது மீண்டும் குப்பை குவிந்துள்ளது.

பருவமழை தொடங்கவுள்ள நிலையில் நீர்வழிப் பாதைகளை சரி செய்வது, ஏரியை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட பணிகள் தொடர்பாக வரும் 6-ம் தேதி யன்று மாநகராட்சி அதிகாரி களுடன் ஆலோசனை செய்ய வுள்ளேன்.

அன்றைய தினம் ஏரியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்துவேன். முன்னதாக குப்பைகளை அகற்றும் பணியை தொடங்கவும் மாநகராட்சி தரப்பில் பேசுகிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT