அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகன் | கோப்புப் படம். 
தமிழகம்

மத நல்லிணக்கதைக் குலைக்கும் செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்: டிடிவி தினகரன் 

செய்திப்பிரிவு

சென்னை: மத நல்லிணக்கதைக் குலைக்கும் செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது.

தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமிய சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தை குலைக்கும் இத்தகையை செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.'' இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT