தமிழகம்

கல் குவாரிக்கு எதிர்ப்பு: பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 பேர் உண்ணாவிரத போராட்டம்

செய்திப்பிரிவு

பல்லடத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 5 பெண்கள் உட்பட15 பேர் நேற்று முன்தினம் உள்ளிருப்புப் போராட்டம், உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.

நேற்று முன் தினம் இரவு விடிய,விடிய போராட்டத்தை தொடர்ந்ததால் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கோடாங்கிபாளையத்தில் செயல்பட்டு வரும் 2 குவாரிகளின் விதிமீறல்களை கண்டித்துகடந்த 12 நாட்களாக உண்ணா விரத போராட்டம் நடத்தி வரும்விவசாயி செந்தில்குமாருக்கு ஆதரவளிக்கும் வகையில் இப்போராட்டம் நடைபெற்றது.

செந்தில் குமாரின் மனைவி கலைச்செல்வி தலைமையில் இப்போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் தலைமைஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.திருஞானசம்பந்தன் உட்பட பலர்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம் டிஎஸ்பி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் முடிவு எட்டப்படாததால் தொடர்ந்துபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT