தமிழகம்

தமிழகம் முழுவதும் மோடி கபடி லீக் தொடக்கம்: 62,000 வீரர்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை தி.நகர் நடேசன் பூங்கா எதிரில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடலில் பாஜகவின் தென்சென்னை மாவட்ட விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின்சார்பில் மோடி கபடி லீக் போட்டியின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பங்கேற்று, மோடி கபடி லீக் போட்டியை தொடங்கி வைத்தார். இதேபோல, தமிழகம் முழுவதும் நேற்று முதல் ‘மோடி கபடி லீக்' போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இதுதொடர்பாக, அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது: ‘மோடி கபடி லீக்' போட்டியில் 5 ஆயிரத்து 25 அணிகள் கலந்து கொண்டுள்ளன. 62 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்பங்கேற்றுள்ளனர். கபடி லீக்போட்டியில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.

மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மதுரையில் 3 நாட்கள் நடைபெற உள்ளது. மாநில அளவில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.15 லட்சம் மற்றும் இத்தாலியில் இருந்து வரவழைக்கப்பட்ட கோப்பை,

2-ம்இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.10லட்சம், 3-ம் மற்றும் 4-ம் இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 லட்சம்பரிசுத் தொகையை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வழங்கஉள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT