பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு வலங்கைமான் பெட்ரோல் பங்க்கில் பாதி விலைக்கு பெட்ரோல் விற்கப்பட்டதால், அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானைச் சேர்ந்தவர் விஜயராகவன். பெட்ரோல் பங்க் உரிமையாளர். பாஜக பிரமுகரான இவர், பிரதமர் மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது பெட்ரோல் பங்க்குக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நேற்று ஒரு நாள் மட்டும் பாதி விலையில் பெட்ரோல் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து, நேற்று காலை முதல் இந்த பெட்ரோல் பங்க்கில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு குறிப்பிட்ட நேரம் வரை பாதி விலைக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது.
அதன்படி, ரூ.2.40 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் பாதி விலைக்கு விற்கப்பட்டதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும், இந்த மாதம் முழுவதும் விவசாயிகளுக்கு டீசல் லிட்டருக்கு ரூ.1 குறைத்து வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.