தமிழகம்

நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு

செய்திப்பிரிவு

புதுச்சேரியில் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி பாஜக பொது செயலர்கள் ரவிச்சந்திரன், தங்க விக்ரமன் ஆகியோர் கூறுகையில், " நிபந்தனையற்ற ஆதரவினை வரும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு அளிக்கிறோம். காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை தோற்கடிக்க என்.ஆர்.காங்கிரஸ் போன்று இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.

நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக கட்சிகள் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துவிட்டன.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தேர்தல் பணியாற்றி வருகின்றன.

அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் தங்கள் கட்சியினருடன் சேர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார். அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT