தமிழகம்

சொத்துக்காக கொலை: சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனை

செய்திப்பிரிவு

மாமல்லபுரம் அருகே சொத்துக்காக புதுமாப்பிள்ளை கொலை செய்யப் பட்ட புகாரில், போலீஸார் சடலத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம் சுனாமி குடியி ருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் கார்த் திக்(27). இவரது மனைவி ரங்கீலா(21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ரங்கீலாவுக்கும் அவரது உறவு முறை சகோதரியான ரஞ்சிதா(25) என்பவ ருக்கும் சொத்து பிரிப்பதில் முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கார்த்திக் கொலை செய்யப் பட்டு செங்கல்பட்டு அருகே மாமண்டூர் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரஞ்சிதாவின் கணவர் டில்லி பாபுவிடம் மாமல்லபுரம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து மதுராந்தகம் வட்டாட்சியர் சங்கீதா முன்னிலையில் கார்த்திக்கின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலையில் சாமியார் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்கு துப்பு கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT