தமிழகம்

பண மதிப்பு நீக்க விவகாரம்: அனைத்து தரப்பு மக்களும் பிரதமருக்கு ஆதரவு - மதிமுக பொதுச் செயலர் வைகோ கருத்து

செய்திப்பிரிவு

பண மதிப்பு நீக்க விவகாரத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பிரதமருக்கு ஆதரவாக உள்ள னர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பு நீக்கப்படு வதாக பிரதமர் மோடி அறிவித் துள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மக்கள் போராடு கின்றனர். நாடாளுமன்றத்தில் அமளி நடக்கிறது. ஏராளமானோர் வரிசையில் நிற்கின்றனர் என்றெல் லாம் பரபரப்பு கிளப்பப்படுகிறது. ஆனால், மக்கள் இதை வரவேற் கின்றனர்.

கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள்தான் இதை எதிர்க்கிறார்கள். ரூ.100, ரூ.500 நோட்டுகளை டன் கணக்கில் அச்சிட்டு, ஏடிஎம் மையங்களில் தயாராக வைத்திருக்கலாமே என்று சிலர் கேள்வி எழுப்புகின் றனர். ஆனால், கறுப்புப் பணத் தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் இதனால் உஷாராகி இருப்பார் கள். அதுமட்டுமின்றி, இந்த அறி விப்பு முதலிலேயே வெளியே தெரிந்திருந்தால் கறுப்புப் பணத் தைப் பதுக்கிவைத்துள்ள அர சியல்வாதிகள் அவற்றை எளிதில் புழக்கத்தில் விட்டிருப் பார்கள். அதனால்தான் பிரதமர் மோடி அமைச்சரவைக்கே தெரி யாமல் இந்த அறிவிப்பை வெளி யிட்டுள்ளார். இதில் அனைத்து தரப்பு மக்களும் பிரதமருக்கு ஆதரவாக உள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT