டெங்கு கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் 
தமிழகம்

தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு: இதுவரை 3 பேர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 282 குழந்தைகள் H1N1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார் மருத்துவமனையில் 215 பேர், அரசு மருத்துவமனையில் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13 பேர் வீட்டில் தனிமையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 117 பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தவிர்த்து தமிழகத்தில் 243 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இதுவரை மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT