எஸ்.பரமேஷ் 
தமிழகம்

கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைவர் பொறுப்பேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கடலோரக் காவல்படையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் எஸ்.பரமேஷ், கிழக்கு கடற் பிராந்திய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இந்திய கடலோர காவல் படையின் கிழக்கு மற்றும் மேற்கு பிராந்திய தலைவராக பணியாற்றி உள்ளார்.

புதுடெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை ஊழியர் கல்லூரிகளில் பயின்ற இவர், சென்னை பல்கலை.யில், பாதுகாப்பு துறைபடிப்பில் எம்.பில். பட்டமும் பெற்றுள்ளார்.

கடலோரக் காவல் படையில், பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய பரமேஷ், இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்களான விஸ்வாஸ்ட், சமர் ஆகிய கப்பல்களின் கமாண்டராகவும் பணியாற்றியுள்ளார். பாதுகாப்பு துறை கல்வியில், வழிகாட்டுதல் மற்றும் இயக்கத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர். குடியரசுத் தலைவரின் தத்ராஷக் விருதையும் பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT