தமிழகம்

6 மாதங்கள் பரோல் கோரி தமிழக முதல்வருக்கு நளினி மனு

செய்திப்பிரிவு

6 மாதங்கள் பரோல் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நளினி மனு அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித் தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் சிறையில் சந்தித்துப் பேசிக்கொள்வது வழக்கம்.

அதன்படி, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருவரது சந்திப்பும் நேற்று நடந்தது. இதனைத் தொடர்ந்து நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்துப் பேசி னார்.

இதுகுறித்து, அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

எனவே, இந்த வழக்கு முடியும் வரை தனக்கு 6 மாதங்கள் பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என கடந்த 12-ம் தேதி சிறை கண்காணிப்பாளர் மூலம் தமிழக முதல்வருக்கு நளினி மனு அனுப்பி உள்ளார்.

மேலும், தான் சிறைக்கு வந்த தற்கான காரணம் குறித்த புத்த கத்தை நளினி எழுதியுள்ளார். 600 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, சென்னை வடபழனியில் வரும் 24-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி யில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட உள்ளார்.

இந்தப் புத்தகத்தில் தனது ஆரம்பகால வாழ்க்கை, முருகன், சிவராசன் சந்திப்பு, சிபிஐ கைது செய்தது, பிரியங்கா காந்தியுடனான சந்திப்பு, அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.

SCROLL FOR NEXT