திருநெல்வேலியில் பெட்ரோல் நிலையத்தில் ஆட்டோக்களுக்கு இலவசமாக டீசல் விநியோகித் தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு நிலையத்தில் ரூ.50 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை அடுத்து, இந்த நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் அவற்றை மாற்றுவதற்காக பல் வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்கள். பெட் ரோல் விற்பனை நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் வாங்கப்படுவதால், அங்கு மொத்தமாக அவற்றை வழங்கி வெள்ளையாக்கும் முயற்சியும் நடைபெறுகிறது.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட் ரோல் நிலையத்துக்கு, நேற்று காலையில் வந்த ஒருவர், ரூ. 500, 1000 நோட்டுகளாக ரூ. 50 ஆயி ரத்தை வழங்கிவிட்டு, அங்கு வரும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பெட்ரோல் அல்லது டீசலை வழங்குமாறும், அந்த ஆட்டோக்களின் பதிவெண்களை குறித்து வைத்திருக்குமாறும் கூறிச் சென்றார்.
பெட்ரோல் நிலையத்தினரும், அங்கு வந்த ஆட்டோக்களின் பதிவெண்களை எழுதிக்கொண்டு இலவசமாக டீசல் அல்லது பெட் ரோல் விநியோகம் செய்தனர். இத்தகவல் பரவியதும் ஏராள மான ஆட்டோக்கள் அந்த பெட் ரோல் விற்பனை நிலையத்தில் குவிந்தன. அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மேலப்பாளையம் போலீஸார் அங்குவந்து பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத் தினர். பெட்ரோல் நிலையத்தி லுள்ள சிசிடிவி கேமரா பதிவு களையும் சேகரித்தனர்.
இதனிடையே மேலப்பாளை யத்திலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திலும் அடையாளம் தெரியாத ஒருவர் ரூ.50 ஆயி ரத்தை வழங்கியுள்ளனர். ஆனால் அங்கு இலவசமாக டீசல் வழங்க வில்லை. அங்கிருந்த ரூ.50 ஆயி ரத்தை போலீஸார் கைப்பற்றினர்.
இலவசமாக பெட்ரோல் நிரப் பிய ஆட்டோக்களின் பதிவெண் களைக் கொண்டு, அதன் உரிமை யாளர் அல்லது ஓட்டுநரை பின் னர் தொடர்புகொண்டு பணம் வசூலிக்கலாம். இதன்மூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக் கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.