வேலூர் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பாஜக சார்பில் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன் தலை மையில் 200-க்கும் மேற்பட்டோர் முழக்கமிட்டபடி காவல் துறையினர் தடுப்புகளை மீறி மாநகராட்சி அலுவலகத்தில் நுழைந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதுடன், மாநக ராட்சி அலுவலகத்தில் அத்து மீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தெற்கு காவல் நிலையத்தில் பாஜகவினர் 103 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று காலை வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாஜக கண்டிப்பு: இது தொடர்பாக வேலூரில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது, ‘‘வேலூரில் பாஜகவினர் மாநகராட்சி மேயரை சந்தித்து மனு அளிக்க முயன்றபோது காவல் துறையினர் அவர்களை தடுத்துள்ளனர்.
இதனையும் மீறி அவர்கள் மேயரை சந்தித்து மனு அளிக்க சென்ற பாஜகவினர் 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் அராஜகத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்துவோம். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பாஜக குறித்து வரம்பு மீறி பேசி வரு கிறார். பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்து வருகிறார்.
தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் சரியான முறையில் செயல்படுத்தவில்லை. தமிழ கத்தில் குடிநீர், சாலை போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப் படை வசதிகள் செய்து தராமல் மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது. ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் அராஜக ஆட்சி நடந்து வருகிறது’’ என்றார்.
அப்போது, பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.