பெ.சு.திருவேங்கடம் 
தமிழகம்

திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் காலமானார்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திமுக முன்னாள் எம்எல்ஏ பெ.சு.திருவேங்கடம் உடல்நலக் குறைவால் காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினரான பெ.சு.திருவேங்கடம்(88), உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு காலமானார்.

இவர், 1962-ல் ஊராட்சித் தலைவராகவும், 1970-ல் துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவராகவும், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் 7 முறை போட்டியிட்டு, 1977, 1980, 1989, 1996 என 4 முறை வெற்றிபெற்றுள்ளார்.

திமுக செயற்குழு உறுப்பினராகவும், சட்ட திட்டக் குழு உறுப்பினராகவும், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவரது மகன் பெ.சு.தி.சரவணன், தற்போதுகலசப்பாக்கம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். பெ.சு.திருவேங்கடத்துக்கு மனைவி சகுந்தலா மற்றும் 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.

மறைந்த பெ.சு.திருவேங்கடத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது சொந்த ஊரானதுரிஞ்சாபுரம் அடுத்த பெரிய கிளாம்பாடி கிராமத்தில் வைக்கப்பட்டுஉள்ளது. அவரது உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பெ.சு.திருவேங்கடத்தின் இறுதி ஊர்வலம் இன்று (செப். 14) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT