தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதியில் அஞ்சல் ஓட்டு போடுவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அங்கு தேர்தல் பணிக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளையும், காவலர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையரி டம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆகியோருக்கு திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
பொதுத் தேர்தல்களின்போது குறிப்பிட்ட தொகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை தேர்தல் பணிக்காக அதே தொகுதியில் பணியமர்த்தும் விதிகள் கிடையாது. தமிழகத் தில் தஞ்சை, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி களுக்கான பொதுத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலை யில், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுடன் சேர்த்து தஞ்சை, அரவக்குறிச்சிக்கும் வரும் 19-ம் தேதி தேர்தல் நடத்தப்பட வுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் உள் ளூர் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் தேர்தல் பணிக்கு அமர்த்தப்படவில்லை. ஆனால் தஞ்சை, அரவக்குறிச் சியில் சம்பந்தப்பட்ட இடங் களில் பணிபுரியும் அரசு ஊழி யர்கள், காவல்துறையினர் அங்கேயே தேர்தல் வேலைக் காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தபால் ஓட்டுக் கான வாக்குச்சீட்டுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. ஆளும் அதிமுகவினர் தங்களது அதிகா ரத்தைப் பயன்படுத்தி அஞ்சல் வாக்குகளை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபடுவதாக எங்களுக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே தஞ்சை, அரவக் குறிச்சியின் தேர்தல் பணிகளை கவனித்து வரும் அந்தப் பகுதி களைச் சார்ந்த அதிகாரிகள், காவல்துறையினரை திரும்பப் பெற வேண்டும். வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர் களை அங்கே தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். வெளியூர் களில் பணிபுரியும் தஞ்சை, அரவக்குறிச்சியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், காவலர்கள், தேர்தல் பணிகளில் ஈடுபடாத நிலையில் அவர்களுக்கும் தபால் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை திரும்பப் பெற வேண்டும்.
அரவக்குறிச்சி தொகுதியில் கடந்த 11-ம் தேதி செலுத்தப் பட்ட தபால் ஓட்டுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அடுத்தகட்டமாக அரவக்குறிச்சி, தஞ்சையில் 15-ம் தேதி நடக்க வுள்ள தபால் வாக்குப்பதிவை ரத்து செய்ய வேண்டும். இது தவிர சட்ட விரோதமாக பதிவு செய்யப்படும் தபால் வாக்கு களையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.